சாதனையாளர் விருது வழங்கும் விழா 2020..

Keep sharing
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சாதனையாளர் விருது வழங்கும் விழா

 

நமது வேட்டுவக்கவுண்டர் உறவுகளுக்கு அனைவருக்கும் வணக்கம்!!

நம் சமுதாய விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றதிக்கான வழிவகைகளை மேற்கொண்டு களமாடி வருகிறது நமது “வேட்டுவர் பூமி” மாத இதழ். நமது சமுதாய மக்களுக்கான கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாற்று களஞ்சியம், இன்னபிற ஆக்கபூர்வமான கட்டுரைகள் மற்றும் செய்திகளை தங்களின் பேராதரவுடன் வெளியிட்டு வருகிறது. தற்போது கடுமையான போராட்டத்தை கடந்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த அழகான தருனத்தில் நிகழும் விகாரி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணி முதல் மதியம் 01.30 வரை நம் சமுதாயத்தில் பல துறைகளில் வெற்றிவாகை சூடிய சாதனையாளர்களுக்கு “சாதனையாளர் விருது வழங்கும் விழா” நடைபெற உள்ளதால் நம் சமுதாய பெரியோர்கள், இளைஞர்கள், நம் சமுதாய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இக்குடும்பவிழாவினை சிறப்பித்து தருமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
காலை 10.00 – 10.15 விநாயகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை,
காலை   10.15 – 10.20 வரவேற்புரை,
காலை  10.20 –  மதியம் 12.15 மகிழ்வுரை, 
மதியம் 12.15 – 01.10 சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல், 
மதியம் 01.10 – 01.15 நன்றியுரை, 
மதியம் 01.15 மணிக்கு மேல் மதிய உணவு.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
                                             சத்யபாமா திருமண மண்டபம், சிறுவலூர் ரோடு                                                   கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம் . 

(கவுந்தப்பாடி நான்கு ரோட்டில் இருந்து சிறுவலூர் செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தொலைவில் சத்யபாமா திருமண மண்டபம் உள்ளது.)

தங்கள் நல்வரவை நாடும்..

வேட்டுவர்பூமி ஆசிரியர் குழு…

தொடர்புக்கு:

இரா. சுப்ரமணி (ஆசிரியர்) * +91 9626 619 619. 

முக்கிய குறிப்பு:    சாதனையாளர்கள் விண்ணப்பங்களை பெற மேற்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும்..  

நன்றி,

வேட்டுவர்பூமி ஆசிரியர் குழு…


Keep sharing
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *