அழகிய தமிழ் ஆண்டுகளின் 60 பெயர்கள்!!

Keep sharing
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்:

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது. தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு. விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது. எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.

வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது இந்துக்களின் வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காரைக்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. திருமயம் – திருப்பத்தூர் சாலையில் இருந்தும் செல்லலாம். கற்பகவிநாயகர் அருள்பாலிக்கும் பிள்ளையார் பட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்தான், குன்றக்குடி குமரன் இருக்கிறார். அழகிய தமிழ் ஆண்டுகளின் 60 பெயர்கள் குன்றக்குடி கோயிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

எண். பெயர் தமிழ் பெயர்  கிரகோரி ஆண்டு எண். பெயர்  தமிழ் பெயர் கிரகோரி ஆண்டு
01. பிரபவ நற்றோன்றல் 1987–1988 31. ஹேவிளம்பி பொற்றடை 2017–2018
02. விபவ உயர்தோன்றல் 1988–1989 32. விளம்பி அட்டி 2018–2019
03. சுக்ல வெள்ளொளி 1989–1990 33. விகாரி எழில்மாறல் 2019–2020
04. பிரமோதூத பேருவகை 1990–1991 34. சார்வரி வீறியெழல் 2020–2021
05. பிரசோற்பத்தி மக்கட்செல்வம் 1991–1992 35. பிலவ கீழறை 2021–2022
06. ஆங்கீரச அயல்முனி 1992–1993 36. சுபகிருது நற்செய்கை 2022–2023
07. ஸ்ரீமுக திருமுகம் 1993–1994 37. சோபகிருது மங்கலம் 2023–2024
08. பவ தோற்றம் 1994–1995 38. குரோதி பகைக்கேடு 2024–2025
09. யுவ இளமை 1995–1996 39. விசுவாசுவ உலகநிறைவு 2025–2026
10. தாது மாழை 1996–1997 40. பரபாவ அருட்டோற்றம் 2026–2027
11. ஈஸ்வர ஈச்சுரம் 1997–1998 41. பிலவங்க நச்சுப்புழை 2027–2028
12. வெகுதானிய கூலவளம் 1998–1999 42. கீலக பிணைவிரகு 2028–2029
13. பிரமாதி முன்மை 1999–2000 43. சௌமிய அழகு 2029–2030
14. விக்கிரம நேர்நிரல் 2000–2001 44. சாதாரண பொதுநிலை 2030–2031
15. விஷு விளைபயன் 2001–2002 45. விரோதகிருது இகல்வீறு 2031–2032
16. சித்திரபானு ஓவியக்கதிர் 2002–2003 46. பரிதாபி கழிவிரக்கம் 2032–2033
17. சுபானு நற்கதிர் 2003–2004 47. பிரமாதீச நற்றலைமை 2033–2034
18. தாரண தாங்கெழில் 2004–2005 48. ஆனந்த பெருமகிழ்ச்சி 2034–2035
19. பார்த்திப நிலவரையன் 2005–2006 49. ராட்சச பெருமறம் 2035–2036
20. விய விரிமாண்பு 2006–2007 50. நள தாமரை 2036–2037
21. சர்வசித்து முற்றறிவு யாவுந்திறல் 2007–2008 51. பிங்கள பொன்மை 2037–2038
22. சர்வதாரி முழுநிறைவு 2008–2009 52. காளயுக்தி கருமைவீச்சு 2038–2039
23. விரோதி தீர்பகை 2009–2010 53. சித்தார்த்தி முன்னியமுடிதல் 2039–2040
24. விக்ருதி வளமாற்றம் 2010–2011 54. ரௌத்திரி அழலி 2040–2041
25. கர செய்நேர்த்தி 2011–2012 55. துன்மதி கொடுமதி 2041–2042
26. நந்தன நற்குழவி 2012–2013 56. துந்துபி பேரிகை 2042–2043
27. விஜய உயர்வாகை 2013–2014 57. ருத்ரோத்காரி ஒடுங்கி 2043–2044
28. ஜய வாகை 2014–2015 58. ரக்தாட்சி செம்மை 2044–2045
29. மன்மத காதன்மை 2015–2016 59. குரோதன எதிரேற்றம் 2045–2046
30. துன்முகி வெம்முகம் 2016–2017 60. அட்சய வளங்கலன் 2046–2047

 

நன்றி,

கே. பி. தங்கவேல் M.A., M.Phil., Ph.D.,
பாண்டிச்சேரி. 

 

 

 

 


Keep sharing
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *